எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம்-இரண்டுமாத குழந்தை உயிரிழப்பு - Yarl Voice எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம்-இரண்டுமாத குழந்தை உயிரிழப்பு - Yarl Voice

எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம்-இரண்டுமாத குழந்தை உயிரிழப்புஎரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்ததாக தியத்தலாவ மரண விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹல்தும்முல்ல சொரகுனே ரதகந்துர என்ற இடத்திலேயே இந்த பரிதாபகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதியளவு பால் குடிக்காததால் குழந்தையின் உடல் மஞ்சள் நிறமாக மாறியதால், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தந்தை முச்சக்கரவண்டியை தேடிக்கொண்டிருந்த போதிலும், எரிபொருள் பற்றாக்குறையால் முச்சக்கரவண்டியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதன் காரணமாக குழந்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தந்தை விசாரணையில் சாட்சியம் அளித்துள்ளார்.

முன்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று தந்தையிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post