அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் - Yarl Voice அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் - Yarl Voice

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்கள் அனைவருக்கும் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க சிறந்த சேவை புரிவார் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த வாரம் புதிதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மூவின மக்களுக்கும் தற்போது நாட்டின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியினை ஏற்றுள்ளார்.

 கிடைக்கப்பெற்றுள்ளபிரதமர் பதவியின் மூலம் வாக்களித்த மக்கள் வாக்களிக்காத மக்கள் என்ற பிரிவினை காட்டாது அனைத்து மக்களுக்கும் அதாவது மூவின மக்களுக்கும் இன மத பேதமின்றி அனைவருக்கும் சமமாக நாட்டிற்கு சேவையை புரிவார் எனவும் பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்,,

0/Post a Comment/Comments

Previous Post Next Post