யாழில் மதுபானசாலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி போத்தல் குத்தில் இளைஞர் பலி!!! - Yarl Voice யாழில் மதுபானசாலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி போத்தல் குத்தில் இளைஞர் பலி!!! - Yarl Voice

யாழில் மதுபானசாலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி போத்தல் குத்தில் இளைஞர் பலி!!!மதுபான சாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் திக்கம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த குணசேகரன் குணசோதி (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார். 

அதனை தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

வைத்திய சாலையில் இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post