ஹசாராங்காவின் அபார பந்து வீச்சு ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களுர் - Yarl Voice ஹசாராங்காவின் அபார பந்து வீச்சு ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களுர் - Yarl Voice

ஹசாராங்காவின் அபார பந்து வீச்சு ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களுர்ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில்; வென்று முதலில் துடப்பாட்டம் செய்த பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக கப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ஓட்டங்கள் விளாசினார்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதரபாத் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ஓட்டங்;கள் எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதனால், 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஹசாரங்கா டி சில்வா ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post