கச்சதீவை இந்தியா மீள கோருவதை ஏற்க முடியாது!! சித்தார்த்தன் எம்பி - Yarl Voice கச்சதீவை இந்தியா மீள கோருவதை ஏற்க முடியாது!! சித்தார்த்தன் எம்பி - Yarl Voice

கச்சதீவை இந்தியா மீள கோருவதை ஏற்க முடியாது!! சித்தார்த்தன் எம்பிஒப்பந்தம் செய்து 50வருடங்களின் பின் கச்சைதீவை இந்தியா கோருவதை ஏற்க முடியாது சித்தார்த்தன் எம்பி தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

இன்று கச்சதீவை இந்தியா முழுமை பெற வேண்டும் என்ற கோஷம் இந்தியாவில் பெருவாரியாக எழுந்துள்ளது. கச்சத்தீவை இந்தியாவிற்கு கொடுப்பதன் மூலம் வடக்கு மீனவர்களின் நிலை இன்னும் மோசமடையும்.

இப்பொழுதே  இந்திய மீனவர்கள் மன்னார் கடற்தொழில் மற்றும் பருத்தித்துறை கடற்கரை வரை வருகை தந்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு எங்களுடைய வளங்களை இல்லாது செய்யும்நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே இதை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. 

இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் இடையில் 50 வருடங்களுக்கு மேலாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையின் கீழ் இருந்து வருகின்றது. ஆகவே மீண்டும் இந்த பிரச்சினையை தொடக்கி விடுவது ஒரு சர்ச்சையாகவே காணப்படுகிறது.

 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது அதனுடைய பிரதிகள் வந்திருக்கின்றன. முதலாவதாக ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியிடமிருந்து தான் ஆளுநர்களுக்கு அதிகாரம் வருகின்றது.

 அவருடைய அதிகாரம் குறைக்கப்படுகின்றது நிச்சயமாக ஆளுநரினுடைய அதிகாரங்களும் குறைக்கப்பட வேண்டும் ஆகவே ஆளுநர் என்பவர் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளுநராக இருக்க முடியாது.

 இந்த விடயங்களை  உள்ளடக்காமல் நாங்கள் ஆதரிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம் சிலர் இதனை அரசாங்கத்திற்கு ஆதரிக்கின்றார்கள் சிலர் இதனை எதிர்க்கிறார்கள் சிலர் 13ஆவது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும் என கூறுகின்றார்கள். 

சிலர் தேர்தல் முறையை இல்லாது செய்ய வேண்டும் அதாவது இப்போது இருக்கின்ற முறைக்குப் பதிலாக தொகுதிவாரி முறையை அமுல்படுத்த வேண்டும்என கூறுகிறார்கள் . 

குறிப்பாக தமிழ் மக்களை பாதிக்கக்கூடிய விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்று அவர்களது  கட்சியில் இருந்து சில விடயங்கள் சொல்லப்படுகின்றன.

 அவர்கள் தமிழர்களுக்கு ஒரு நிச்சயமான நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைத்து வரவை உருவாக்க மாட்டார்கள். ஆகவே காத்திருந்து பார்த்துதான் குறித்த வரைபிற்கு ஆதரவளிப்பதாக இல்லையா என்பதை கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post