இந்து மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல்! மோடியினால் தான் இந்துக்ளை பாதுகாக்க முடியும்! யாழில் சிவசேனை அமைப்பு - Yarl Voice இந்து மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல்! மோடியினால் தான் இந்துக்ளை பாதுகாக்க முடியும்! யாழில் சிவசேனை அமைப்பு - Yarl Voice

இந்து மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல்! மோடியினால் தான் இந்துக்ளை பாதுகாக்க முடியும்! யாழில் சிவசேனை அமைப்பு




இலங்கை பொருளாதார பிரச்சினையை தீர்க்க விமானம் கப்பல் சேவையை ஆரம்பியுங்கள் சிவசேனை வேண்டுகோள்

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு காங்கேசன்துறை காரைக்கால் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான சர்வதேச விமான நிலைய போக்குவரத்தை ஆரம்பியுங்கள் என இலங்கை சிவசேனைப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்திய மாநில தலைவர் அண்ணாமலையைச் சந்தித்த போது பல விடயங்கள் பற்றி அவரிடம் ஆழமாகக் கூறியிருந்தோம்

 இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருக்கிறது.

யாழ் காங்கேசன்துறை காரைக்காலுக்கு இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையினை ஆரம்பிப்பதும் இதற்கு தீர்வாக கொள்ள முடியும்.

மேலும் இலங்கையில் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் ஆக்கிரமிப்பால் இந்து சமயம் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்ற நிலையில் பாரத பிரதமரின் செயற்பாட்டினால் இலங்கையில் வாழ 30 லட்சம் இந்துக்களை பாதுகாக்க முடியும் என அண்ணாமலையிடம் எடுத்துக் கூறினோம்.

மேலும் கச்சதீவும் இந்துக்களின் புனித பூமியில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நிலையில் பொலநறுவைக் காலத்தில் இந்து சமயம் மேலோங்கி காணப்பட்ட நிலையில் கச்சதீவில் சிவன் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது.

எனினும் போர்த்துக்கீசர் காலத்தில் கச்சதீவில் அமைக்கப்பட்ட சிவன் ஆலயம் அழிக்கப்பட்ட நிலையில் இன்னும் மீள் உருவாக்கப்படவில்லை.

இலங்கையில் மதமாற்ற சட்டத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக  ஆட்சிக்  குழப்பத்தின் காரணமாக அதனை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இன்று வடக்கு கிழக்கில் இந்து மக்கள்  திட்டமிட்டு மதமாற்றப்படுகின்ற நிலையில் இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போன்று  இலங்கையில் மதமாற்ற தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும்.

ஆகவே தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவான இந்தியா இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தமிழ் மக்களின் இருப்பையும் இந்து மதத்தின் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் இலங்கை சிவசேனை அமைப்பின் பொதுச் செயலாளர் என்.பி சிறீந்திரன் சிவத் தொண்டர்கள்களான ஜெயா மாறன் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post