வல்வெட்டித்துறை மண்ணை வணங்கி ஆரம்பித்தது முள்ளிவாய்க்கால் பேரணி - Yarl Voice வல்வெட்டித்துறை மண்ணை வணங்கி ஆரம்பித்தது முள்ளிவாய்க்கால் பேரணி - Yarl Voice

வல்வெட்டித்துறை மண்ணை வணங்கி ஆரம்பித்தது முள்ளிவாய்க்கால் பேரணி



பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது பிறந்த வீட்டுக்கு முன்னால் விழுந்து வணங்கி   நேற்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

மே 18 ல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ் மக்களை கொத்துக்  கொத்தாக கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் கறைபடிந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் கடந்த 12ஆம் திகதி உணர்வுபூர்வமாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது நடைபவனியாக பருத்தித்துறை நெல்லியடி, அச்சுவேலி ,நல்லூர் கந்தசாமி ஆலயம் யாழ் பல்கலைக்கழகம் ஊடாக யாழ் நகரத்தை வந்தடையவுள்ளது.

பின்னர் யார் நகரத்திலிருந்து நாவற்குழி கைதடி சாவகச்சேரி கொடிகாமம் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து அங்கிருந்து மே 18 திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சென்றடைய உள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post