யாழில் புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - Yarl Voice யாழில் புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழப்பு



யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர். 

அதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை உள்ளதாகவும் , அதனால் அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் , தமக்கு பாதுகாப்பான புகையிரத கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post