உயிரோடு இருக்கிறாரா ரஷ்ய ஜனாதிபதி புதின் ? பிரித்தானிய உளவு நிறுவனத்தால் பரபரப்பு! - Yarl Voice உயிரோடு இருக்கிறாரா ரஷ்ய ஜனாதிபதி புதின் ? பிரித்தானிய உளவு நிறுவனத்தால் பரபரப்பு! - Yarl Voice

உயிரோடு இருக்கிறாரா ரஷ்ய ஜனாதிபதி புதின் ? பிரித்தானிய உளவு நிறுவனத்தால் பரபரப்பு!



பிரித்தானிய  உளவு நிறுவனமான எம்ஐ6, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் இறந்துவிட்டதாகப் புதிய தகவலைக் கசிய விட்டுள்ளது. புதினுக்குப் புற்றுநோய், அறுவை சிகிச்சையால் அவதிப்படுகிறார் என்றெல்லாம் அண்மைக்காலமாக செய்திகள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் மத்தியில், புதின் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அவரின் மறைவு குறித்த தகவல்களை ரஷ்யா மறைத்து வருவதாகவும் எம்ஐ6 தெரிவிக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் ரஷ்ய வீரர்களை புதின் சந்தித்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாயின. அவற்றை ஆராய்ந்த சர்வதேச உடல்மொழி ஆய்வாளர்கள், புதின் போல தோற்றமளிக்கும் நபரே புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக அறிவித்தனர்.

ஹிட்லர், சதாம் ஹூசைன் போன்றோர் பாணியில் புதினும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தன்னைப் போன்ற உருவமுடையவர்களை உலவ விடுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதின் நகல்கள் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அசல் புதின் உயிரோடு இல்லை என்றும் தற்போதைய ஊகங்கள் தெரிவிக்கின்றன.

69 வயதாகும் புதினின் உடல்நிலை குறித்த எதிர்மறையான தகவலகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. அதிலும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளை அடுத்து இந்த ‘செய்திகளுக்கு’ மேற்கு ஊடகங்கள் வலிந்து முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டன. பார்கின்சன் நோயால் புதின் அவதிப்பட்டு வருவதாகவும் அதன் பாதிப்பின் உச்சமாகவும், குணப்படுத்தலுக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளும் புதினின் மூளையைப் பாதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் பாதிப்புகளின் பக்கவிளைவாக புதின் தனது பார்வைத் திறனை படிப்படியாக இழந்துவருவதாகவும் புலனாய்வு கட்டுரைகள் தெரிவித்தன. அதற்கேற்ப புதினின் இயல்புக்கு மாறான உடல் சமிக்ஞைகளையும், அவற்றை மறைக்க அவர் தடுமாறுவதையும் அவை பட்டியலிட்டன.
தீவிர உடல்பாதிப்புகளுக்கு மத்தியில் தனது எஞ்சிய வாழ்நாளில் ஆற்றியாக வேண்டிய கடமைகள் குறித்து விசுவாசிகளுடன் புதின் விவாதித்து வந்ததாகவும், அதனடிப்படையில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும் தற்போது சொல்கிறார்கள். ஆனால் போர் தீவிரமடைந்த சூழலில் மேலும் உடல்நிலை குன்றிப்போன புதின், அண்மையில் இறந்துவிட்டதாக இப்போது பரபரக்கிறார்கள். பிரிட்டன் உளவு நிறுவனமான எம்ஐ6 அமைப்பின் உளவாளிகள் அளித்த தரவுகளின் அடிப்படையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் புதின் இறந்திருக்கலாம் என்று எம்ஐ6 தலைமையே தகவல்களைக் கசிய விட்டிருக்கிறது. அதிபர் புதின் குறித்த எதிர்மறைத் தகவல் வெளியாவது உக்ரைன் யுத்த முனையில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மன உறுதியைக் குலைக்கும் என்றும், நேட்டோ படைகளின் அச்சுறுத்தல் வெளிப்படையாகும் என்றும் ரஷ்யா கணித்திருப்பதால், புதின் மறைவு குறித்த தகவலைக் கூடுமானவரை ரஷ்யா மறைக்க முயல்வதாகவும் எம்ஐ6 தெரிவிக்கிறது.

நன்றி – காமதேனு (த இந்து 

0/Post a Comment/Comments

Previous Post Next Post