எரிபொருளை பெற்றுக்கொள்ள யாழில் புதிய நடைமுறை!!!! - Yarl Voice எரிபொருளை பெற்றுக்கொள்ள யாழில் புதிய நடைமுறை!!!! - Yarl Voice

எரிபொருளை பெற்றுக்கொள்ள யாழில் புதிய நடைமுறை!!!!



🔴 யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படும். 

🔴 நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேரடியாக சேகரிக்கப்படும். இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிப்பார்.

🔴 பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை  இடைநிறுத்த  CEYPETCO தீர்மானம்.

🔴 வாகனங்களுக்கான பங்கீட்டு அட்டை முறை அறிமுகமாகிறது. - ஜூலை 1ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது.

🔴 அதன்படி மக்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள  ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தெரிவு செய்து அங்கு மாத்திரமே எரிபொருளை பெறும்வகையில் பொறிமுறை உருவாக்கப்படும்.

🔴 சுகாதார சேவையினருக்கான எரிபொருள் விநியோகத்துக்கு தனியான ஏற்பாடுகள் செய்யப்படும்.

🔴 அரச உத்தியோகத்தர்கள் தமக்கான எரிபொருள் நிலையத்தை தெரிவு செய்து பதிவு செய்யும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🔴 அரச உத்தியோகத்தர்கள் திணைக்கள தலைவர்களிடம் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

🔴 ஒவ்வொரு பிரதேச செயலக எல்லைகளுக்குள் அமைந்துள்ள ப.நோ.கூ.ச MPCS நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை வழங்கும்.

இன்று (20.06.2022) இடம்பெற்ற யாழ் மக்களுக்கான எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post