எரிபொருளை பெற்றுத்தர வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம் - Yarl Voice எரிபொருளை பெற்றுத்தர வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம் - Yarl Voice

எரிபொருளை பெற்றுத்தர வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்று வருகிறது.

வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட படிவத்தினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தூர பிரதேசங்களில் இருந்து குறிப்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள மதிப்பீட்டாளர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வந்து தமது மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட வடிவத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கவில்லை என தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் இரண்டு மணிக்கு பின்னர் பிரத்தியேகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து மதிப்பீட்டு பணிகள் ஆரம்பமாகின.

மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்த போதிலும் இன்று வருகை தந்த மதிப்பீட்டாளர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட பணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து இன்றைய தினம் மீண்டும் மதியம் 2 மணிக்கு மதிப்பீட்டாளர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இன்றைய தினமும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் மதிப்பீட்டாளர்கள் தமது பணி புறக்கணிப்பு தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post