இபோச ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கவில்லை! அரச அதிபர் மீது குற்றச்சாட்டு - Yarl Voice இபோச ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கவில்லை! அரச அதிபர் மீது குற்றச்சாட்டு - Yarl Voice

இபோச ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கவில்லை! அரச அதிபர் மீது குற்றச்சாட்டு
யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று சாலைகளிலும் பணியாற்றுகின்ற சாரதி காப்பாளர்கள் கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் வழங்காமை யாழ் மாவட்ட செயலாளர் என சண்டையீனமே காரணம் என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பணியாற்றுகின்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பெரும்பாலானவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் மட்டும் எரிபொருள் வழங்காமாமை கவலை அளிக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாம் கடமைக்கு செல்வதற்கான  எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தோம்.

நமது ஊடக சந்திப்பை அடுத்து வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு தமக்கான எரிபொருளை பெற்று கொடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியதன் பயனாக  எரிபொருள் வழங்கும் ஏனைய மாவட்டங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டது.

ஆனால் யாழ் மாவட்டத்திலுள்ள காரைநகர், பருத்தித்துறை, மாற்றும் யாழ் சாலைகளில் பணியாற்றும் சாரதிகளுக்குரிய எரிபொருள் இதுவரை வழங்கப்படவில்லை.

வட மாகாண ஆளுநர் இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதான முகாமையாளர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை தமக்கான எரிபொருள் கிடைக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர் .

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனைத் தொடர்பு கொண்ட போது குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post