தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர்
உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள இடையூறுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ் வணிகர் கழகத்தில் ஆராயப்பட்டது.
யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றதோடு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலில் யாழ் வணிகர் கழகத்தின் தலைவர், செயலாளர், வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment