அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை பெற தீர்மானம் - Yarl Voice அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை பெற தீர்மானம் - Yarl Voice

அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை பெற தீர்மானம்
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்படி விடயம் உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விசேசமாக பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1. சமூக சமையலறை உருவாக்கம்: அன்றாட வருவாயைப் பெறுவதில் சிரமப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தினசரி உணவை வழங்குதல்.

2. உலர் உணவுப் பொதிகள் விநியோகம்: முக்கியமாக பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளி குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானத்திற்குக் கீழ் உள்ள முதியோர் குடும்பங்களுக்கு உதவி வழங்குதல்.

3. வீட்டுத் தோட்டப் பொதிகள் விநியோகம்: நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கான உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஆதரித்தல்.

4. மொழிப் பயிற்சிகளை வழங்குதல் (ஜப்பானிய, கொரியன் உள்ளிட்ட) : இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான உதவிகளை மேற்கொள்ளல்.

5. முன்பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்: குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டைக் குறைப்பதற்கான திட்டம்.

இவ்விடயங்களை உள்ளடக்கிய வகையில் செயற்றிட்டங்களை மேற்கொள்வதோடு, மேலதிக திட்டங்கள் தொடர்பாக விபரங்களை மாவட்ட செயலக அலுவலருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். அதாவது
 thayaparan74@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அங்கஜன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post