யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவனுக்குச் சிறப்பான ஆனி உத்தர நாளான இன்று (06) சகலதோஷ நிவர்த்தி தரும் தேவர்கள் துயிலெழும் பிரம்மமுஹூர்த்தம், ஆநிரைகள் பட்டியிலிருந்து கிளம்பும் கோதூளிகா முஹூர்த்தம் ஆகிய இரு சிறப்புக்களுடன் கூடிய அதிகாலை பொழுதில் சூரிய கிரணங்கள் மெல்லென விரியும் விடியல் ஒளியில் காலை 6.00 மணிமுதல் 7.00 மணி வரையான மிதுன லக்ன சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற்றது.
இன்று காலை யாக பூஜையைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி, தீபாராதனை, விசேஷ பூஜை என்பன இடம்பெற்று, வேத ஸ்தோத்திர, திருமுறை, நிருத்திய கீத வாத்ய உபசாரங்களுடன் கும்பங்கள் புறப்பட்டு வீதிப்பிரதட்சிணமாக வந்து காலை 6.00 மணிமுதல் 6.45 மணி வரையான மிதுன லக்ன சுபமுகூர்த்த வேளையில் ஸ்தூபி அபிஷேகம், ராஜகோபுர கும்பாபிஷேகம், அனைத்து மூர்த்திகளுக்குமான மகாகும்பாபிஷேகமும் இடம்பெற்றது.
Post a Comment