யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை(26) முதல் ஜம்பது வீதமளவில் இயங்குமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ. கெங்காதாரன் தெரிவித்தார்.
யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் யாழ் மாவட்ட செயலக மேற்பார்வையில் எரிபொருளை பெற்றுத்தர அரச அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளை நாளை முதல் இயக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
எரிபொருள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment