யாழில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தனியார் பேருந்து சேவைகள்!! பொதுமக்கள் பாதிப்பு - Yarl Voice யாழில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தனியார் பேருந்து சேவைகள்!! பொதுமக்கள் பாதிப்பு - Yarl Voice

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தனியார் பேருந்து சேவைகள்!! பொதுமக்கள் பாதிப்புஅச்சு வேலி யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாத காரணத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர். 

இதனால் தான் போக்குவரத்து சேவையிலிருந்து விலகி உள்ளதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பாடசாலை போக்குவரத்து சேவை, அத்தியாவசிய சேவைகளிலிருந்து தாம் விலகி உள்ளதாக சாரதிகள் கூறுகின்றனர்.  

மேலும் இதனால் பஸ் நடத்துனர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாரதி சாரதி,நடத்துனர் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர்கள் தற்பொழுது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியாது நிலையில் தவிக்கின்றனர்.

அச்சுவேலி தனியார் பேருந்து சேவையில் 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற பொழுதிலும் தற்போது ஆறு பேருந்துகளை சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றன.

தாம் கோண்டாவில் பேருந்து சாலையில் டீசலை பெறுவதற்காக பல நாட்களாக காத்திருக்கின்ற பொழுதும் தமக்கான டீசல் இதுவரை கிடைக்க பெறவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post