மாவிட்டபுர கந்தனின் மகோற்சபம் ஆரம்பம் - Yarl Voice மாவிட்டபுர கந்தனின் மகோற்சபம் ஆரம்பம் - Yarl Voice

மாவிட்டபுர கந்தனின் மகோற்சபம் ஆரம்பம்வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தனின் வருடாந்த மஹோற்சவ கார்த்திகைத் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) இடம்பெறுமென ஆதீனகர்த்தா  மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்தார்.

மாவிட்டபுரம் கந்தனின் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் வேளையில் கார்த்திகைத் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) இடம்பெறும்.

மேலும் வேட்டைத்திருவிழா 25ம் திகதி திங்கட்கிழமையும் சப்பரத் திருவிழா 26ம் திகதி செவ்வாய்க்கிழமையும் தேர்த்திருவிழா 27ம் திகதி புதன்கிழமையும் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் 28ம் திகதி வியாழக்கிழமையும் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post