எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இம் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதித் வாக்கெடுப்பில் போட்டியிடத் தீர்மானித்துள்ள டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment