யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ வணிக பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு! - Yarl Voice யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ வணிக பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு! - Yarl Voice

யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ வணிக பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு!யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஏழாவது மாநாடு  எதிர்வரும் 14ஆம் திகதி, வியாழக் கிழமை, முற்பகல் 9.00 மணி முதல் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

“புதிய இயல்பில் மீள்தன்மைக்காக வணிகத்தை மாற்றுதல்"  ( Transforming Business for Resilience in New Normal )” என்ற தொனிப்பொருளில்  இடம் பெறவுள்ள இந்த இவ் ஆய்வு மாநாட்டில்  ஆஸ்திரேலியாவின் சதேர்ண் குறொஸ் பல்கலைக் கழக ( Southern Cross University) தகவல் அமைப்புகள் முறைமைப் பேராசிரியர் தர்சனா செடெராவின் முதன்மை உரை நிகழ்நிலை வாயிலாக இடம்பெறவுள்ளது. 

கணக்கியல் மற்றும் நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி, முயற்சியாண்மையும் பதியன புனைதலும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், மனித வள முகாமைத்துவம் மற்றும் நிறுவன கற்கைகள், கற்றல் கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகிய 07 உப பிரிவுகளின் கீழ் 43 ஆய்வுக் கட்டுரைகள் இவ் ஆய்வு மாநாட்டில்   சமர்ப்பிக்கப்படவுள்ளன.  இவற்றுடன், மாணவர்களின் அறிவு மற்றும் ஆய்வுத்  திறனை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் ஆய்வு  மாநாடும்  (Student Research Symposium) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக 6 ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. மாநாட்டு நிகழ்வுகளையும், ஆய்வுச் சமர்ப்பணங்களையும் http://www.iccm.maco.jfn.ac.lk என்ற இணையத் தளத்தினூடாக நேரலையாகப் பார்வையிட முடியும். 

இம் மாநாட்டுக்கு எமேரல்ட் பதிப்பகம்  (Emerald Publishing) கல்விசார் பங்காளியாகவும்,  இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் ( Institute of Bankers of Sri Lanka ), இலங்கை பட்டய நிதி பகுப்பாய்வாளர்; சமூகம் ( CFA Society Sri Lanka ), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் ( Sri Lanka Institute of Marketing ), பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( Charted Accountants of Sri Lanka    ), பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கம் ( Association of Charted Certified Accountants ) ஆகியன தொழில்முறை பங்காளர்களாகவும் அனுசரணை வழங்குகின்றன.   

0/Post a Comment/Comments

Previous Post Next Post