காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - Yarl Voice காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - Yarl Voice

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களால் கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் போன்றவற்றை அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இதனை தெரிவித்தார்.

சபாநாயகர் வௌியிட்டு கருத்தை தொடர்ந்து அமைதியை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால், பதவியை விட்டு விலகியதைப் போன்று கருதுவதாகவும் தெரிவித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post