கல்வி அமைச்சு விடுத்த முக்கிய தீர்மானம் - Yarl Voice கல்வி அமைச்சு விடுத்த முக்கிய தீர்மானம் - Yarl Voice

கல்வி அமைச்சு விடுத்த முக்கிய தீர்மானம்நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு   இன்று முதல் மேலும் மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல்  எதிர்வரும்  20 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் 21 ஆம் திகதி  முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக  கடந்த  11 ஆம் திகதி முதல்  15 ஆம் திகதி வரை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பாடசாலைகளை  திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

 எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post