பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு ராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும்! யாழ் கட்டளை தளபதி ஆயரிடம் தெரிவிப்பு - Yarl Voice பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு ராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும்! யாழ் கட்டளை தளபதி ஆயரிடம் தெரிவிப்பு - Yarl Voice

பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு ராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும்! யாழ் கட்டளை தளபதி ஆயரிடம் தெரிவிப்புபுதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மரை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினை இன்றைய தினம் 1000 இல்லத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினர் குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்ஆயர் கருத்து தெரிவித்த போது

தற்பொழுது  யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக  மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்

 ஆனபடியினால்  இயன்ற அளவு அரசு அதிபரோடு இணைந்து அவரின் கீழ் எரிபொருளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்புக்குரிய ஒழுங்கமைப்பினை மேற்கொண்டுள்ளோம்   என யாழ் கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாகவும் மேலும்

வடபகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி எதுவும்  எமக்கு கிடைக்கவில்லை இருந்தும் வறிய குடும்பங்களுக்கான உதவிகள் செய்து கொண்டிருக்கின்றோம் 

 அத்தோடு எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போக்குவரத்துஸ்தம்பிதம் அடைந்துள்ளது கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு போய் வருவது கஷ்டமாகவுள்ளது 

முக்கியமாக சுகாதார பிரிவினருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பினையும் கொடுத்து தயாராக இருக்கின்றோம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடைய பணியினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இராணுவம்  ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் மாவட்ட ராணுவ கட்டட தளபதி தன்னிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post