ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பதவியேற்கும் நிகழ்வினை, நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜனாதிபதி பதவியேற்க சில நிமிடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் மின்சாரம் தடைப்பட்டது. அதனால் நேரடி ஒளிபரப்பில் தாமதம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும் இதன் பின்னணியில் சதி வேலைகள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளது குற்றப்புலனாய்வுத் திணைக்களம். நாடாளுமன்ற பொலிஸார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment