தனிஸிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணை - Yarl Voice தனிஸிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணை - Yarl Voice

தனிஸிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணைஇம்மாதம் 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர் தனிஸ் அலி என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

டுபாய் செல்ல முயற்சித்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தினுள் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

கைதுசெய்யப்பட்ட குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபரை தீவிர விசாரணைக்கு உட்படுத்த குற்றப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். 

கொழும்பு, கோட்டை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் அடிப்படையில், கடந்த 13ஆம் திகதி சில தரப்பினர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில், குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post