அடுத்த ஜனாதிபதி யார்?? தொடரும் கட்சி நாவல்களும், பேச்சுக்களும் அதிரடி அறிவிப்புக்களும்..!! - Yarl Voice அடுத்த ஜனாதிபதி யார்?? தொடரும் கட்சி நாவல்களும், பேச்சுக்களும் அதிரடி அறிவிப்புக்களும்..!! - Yarl Voice

அடுத்த ஜனாதிபதி யார்?? தொடரும் கட்சி நாவல்களும், பேச்சுக்களும் அதிரடி அறிவிப்புக்களும்..!!நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று இடம்பெற்றது.

அதனடிப்படையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததோடு, அமைச்சர் மனுஷ நாணயக்கார அதனை வழிமொழிந்தார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்ததுடன் அதனை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் வழிமொழிந்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்ததுடன் அதனை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழிமொழிந்தார்.

இதனை அடுத்து நாளை (20) காலை 10 மணி வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post