காரைநகரில் இன்றிரவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இத்தாக்குதல் இடம்பெற்றது.
இத்தாக்குதலில் காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவர் காரைநகர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார் எனத் நெரியவருகின்றது.
Post a Comment