கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு - Yarl Voice கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு - Yarl Voice

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று  நடைபெற்றது. 

 எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் கொரடா  புத்திக பத்திரன ஆகியோரும்  கூட்டமைப்பின் தரப்பில் தமிழ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற  சந்திப்பில்  நாட்டில் எழுந்திருக்கும் தற்போதைய கடுமையான பொருளாதார சிக்கல்,  அரசியல் சூழ்நிலை,  அரசியல் மாற்றத்திற்கான முயற்சிகள்,  தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள்,  அரசியல் யாப்பு விடயங்கள், நாட்டின் நிரந்தர மீட்சிக்கு அரசியல் தீர்வின் முக்கியத்துவம்,  தொல்லியல்  நடவடிக்கைகளினால் ஏற்படும் இன முரண்பாடு  என முக்கிய  விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

TNA MPs hold key meeting with Leader of Opposition

  A meeting between the leader of the opposition and the main member party of the Tamil National Alliance, the Tamil Eelam Liberation Organization was held at 12.30 pm yesterday (07-07-2022).

  The meeting was held at the office of the Leader of the Opposition.  Leader of Opposition Sajith Premadasa, General Secretary of United People's Power (SJB) Ranjith Mathumabandara and Whip Buddika Pathirana and on behalf of the TNA Tamil Tamil Eelam Liberation Organization President Selvam Adaikalanathan, General Secretary Govindan Karunakaram and National Organizer and Media Spokesman Guruswamy Surenthiran have participated.

  In the meeting which laster for more than an hour, important issues such as the current severe economic problem faced by the country, present political situation, efforts for political change, problems faced by the Tamil people, political issues, importance of political solution for the country to recover permanently from the crisis, ethnic conflict caused by archaeological activities were discussed.

0/Post a Comment/Comments

Previous Post Next Post