ராஜபக்சக்களை விரட்டியடிப்பதற்கு திட்டம் தீட்டிய சக்திகளைத் தெரியும் - காலம் ஒரு நாள் பதில் சொல்லும் என்கிறார் மஹிந்த - Yarl Voice ராஜபக்சக்களை விரட்டியடிப்பதற்கு திட்டம் தீட்டிய சக்திகளைத் தெரியும் - காலம் ஒரு நாள் பதில் சொல்லும் என்கிறார் மஹிந்த - Yarl Voice

ராஜபக்சக்களை விரட்டியடிப்பதற்கு திட்டம் தீட்டிய சக்திகளைத் தெரியும் - காலம் ஒரு நாள் பதில் சொல்லும் என்கிறார் மஹிந்த

 

"அதியுயர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளை எனக்குத் தெரியும். எனினும், நான் அமைதியாகவே இருக்கின்றேன். உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். காலம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரும்."

- இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 

புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலருடன் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கின்றேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், நாட்டைவிட்டு ஏன் ஓட வேண்டும்?"

ராஜபக்சக்கள் உள்ளடங்கிய பெரமுன கட்சி மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்று எதிர்த்தரப்பினர் உளறுகின்றனர். இது வேடிக்கையாக இருக்கின்றது.

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். உங்கள் (அமைச்சர்கள்) அனைவருக்கும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post