தடுமாறும் அரசை பதவி விலகக்கோரி யாழில் நாளை மாபெரும் துவிச்சக்கரவண்டி பேரணி!! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை பகிரங்க அழைப்பு! - Yarl Voice தடுமாறும் அரசை பதவி விலகக்கோரி யாழில் நாளை மாபெரும் துவிச்சக்கரவண்டி பேரணி!! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை பகிரங்க அழைப்பு! - Yarl Voice

தடுமாறும் அரசை பதவி விலகக்கோரி யாழில் நாளை மாபெரும் துவிச்சக்கரவண்டி பேரணி!! தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை பகிரங்க அழைப்பு!தடுமாறும் அரசே பதவிவிலகு 
மக்கள் வயிற்றில் அடிக்காதே எனும் தொனிப்பொருளில் நாளை யூலை 09 ம் நாள் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில்  இடம்பெறவுள்ள துவிச்சக்கரவண்டி பேரணி, அதைனைத் தொடர்ந்து இடம்பெறும் அரசுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை பூரண ஆதரவை வழங்குகின்றது.

மேலும் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பிக்கும் இந்த துவிச்சக்கரவண்டி பேரணி பலாலி வீதியுடாக யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைய இருக்கின்றது. 

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான இந்தஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் எமது பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், என அனைத்து தரப்பினரையும் எவ்விதமான பாகுபாடுமின்றி பெருந்திரளாக கலந்து கொண்டு எமது தார்மீக கடமையை நிலைநாட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post