யாழ்ப்பாணம், வண்ணை வீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இன்று (08) அம்பாளுக்கு புதுப் பொலிவாக அமைத்த புதிய தங்கரதம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
இந்த தங்கரதத்தினை ஈழத்து சிறப்பு ஸ்தபதியான கலைவாணி சிற்பக்கூடத்தின் முதன்மைச் சிற்பியான சிற்பவாரிதி திரு கு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்தபதிகள் குழாமினால் நேர்த்தியாக இந்த தங்கரதம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பானது திருப்பதி வெங்கடாசலபதியின் தங்கரதத்தின் வடிவமைப்பினை ஒத்ததாகவும் ஈழத்தில் இருக்கின்ற கோயில்களின் தங்கரதங்களின் பார்க்க பெரிய தங்கரதமாக அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளோட்டத்தினை தொடர்ந்து தங்கரதமான இன்று புதிய தங்கரதத்தில் அம்பாளின் திருவீதி வலம் இடம்பெற்றது.
Post a Comment