காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலைக் கண்டித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்,
"காலிமுகத்திடல் தாக்குதல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றவேண்டும் என்றால் பொலிஸாரைக் கொண்டு அதனைச் செய்திருக்கவேண்டும். அதைவிடுத்து முப்படையினரையும் களமிறக்கி ஆயுதபலத்தைக் கொண்டு தாக்குதல்களை நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக வழியில் போராடும் மக்களின் உரிமைகளை எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மதிக்கவேண்டும். மக்களின் ஜனநாயக எழுச்சிப் போராட்டம்தான், அராஜக ராஜபக்ச ஆட்சிக்கு முடிவு கட்டியது. இதனைப் புதிய ஜனாதிபதி ரணில் உணர்ந்து செயற்படுவார் என்று நம்புகின்றேன்" - என்றார்.
எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும்
மக்கள் போராட்டத்தை மதியுங்கள்
- 'கோல்பேஸ்' தாக்குதலுக்குச் சந்திரிகா கண்டனம்

Post a Comment