இலங்கைச் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட போலந்துப் பிரஜையே தமிழகத்துக்குள் ஊடுருவல் - பொலிஸாரிடம் சிக்கிய அவரிடம் தீவிர விசாரணை - Yarl Voice இலங்கைச் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட போலந்துப் பிரஜையே தமிழகத்துக்குள் ஊடுருவல் - பொலிஸாரிடம் சிக்கிய அவரிடம் தீவிர விசாரணை - Yarl Voice

இலங்கைச் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட போலந்துப் பிரஜையே தமிழகத்துக்குள் ஊடுருவல் - பொலிஸாரிடம் சிக்கிய அவரிடம் தீவிர விசாரணை



கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்குச் சென்ற போலந்து நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் வேதாரண்யம் அருகே உள்ள முனங்காடு பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலிருந்த படகொன்று தமிழகப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டிருந்தது. 

இப்படகு காற்றலை மூலம், இருவர் பயணம் செய்யகி கூடியது என்று தமிழகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மேலும் சுழியோடிகள் பாவிக்கும் காலணி, படகுக்கு காற்று நிரப்பும் கருவி, உயிர்பாதுகாப்பு கவசங்கள், சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள், 18 இற்கும் மேற்பட்ட தண்ணீர்ப் போத்தல்கள், மிதவைகள் என்பவற்றுடன் படகுக்கு அருகில் இருந்து மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

இலங்கையில் இருந்து இந்தப் படகின் மூலம் வந்தவர்கள், தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் எனத் தமிழகக்  கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் கொண்டு, க்யூ பிரிவினருடன் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் விளைவாக வேதாரண்யம் பகுதிக்கு அருகில் உள்ள ஆறுகாட்டுப் பகுதியில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுகின்றார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.

அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடனும், ட்ரோன் கமராக்கள் மூலமும் பொலிஸார் தீவிர தேடுதல் நடத்தினர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இலங்கையில் விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்த குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து, தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து கடவுச்சீட்டின்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்தினுள் ஊடுருவிய குற்றச்சாட்டில், குறித்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தமிழகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post