புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவியேற்பு..! - Yarl Voice புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவியேற்பு..! - Yarl Voice

புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவியேற்பு..!நாட்டின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் 15 ஆவது பிரதமர் தினேஸ் குணவர்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1949 பிறந்த பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு வயது 73 ஆகும், இவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன், சர்வதேச ரீதியில் வெளிநாட்டு பொருளாதார சிறப்பு பட்டங்களை பெற்றவர் ஆவார்.

1973 ஆம் ஆண்டு அரசியலுக்கு பிரவேசித்த இவர், இது வரையில், கல்வி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், நீர்பாசனம் உள்ளிட்ட மிக முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய நாடாளுமன்றத்தின் சபை முதல்வராகவும் தினேஸ் குணவர்தன செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது


0/Post a Comment/Comments

Previous Post Next Post