முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 3 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"இலங்கை வரும் கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவர சிலர் முயற்சிக்கின்றனர். தேசியப்பட்டியல் ஊடாக எம்.பியாக்கி, பிரதமர் கதிரையை வழங்கவும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை மக்கள் ஏற்கப்போவதில்லை" என்றும் உதயங்க வீரதுங்க மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment