கொள்ளைச் சம்பவம்: 4 பொலிஸார் கைது! - Yarl Voice கொள்ளைச் சம்பவம்: 4 பொலிஸார் கைது! - Yarl Voice

கொள்ளைச் சம்பவம்: 4 பொலிஸார் கைது!கொட்டாவ - வித்தியால சந்தியில் இளைஞர் ஒருவரின் தங்க நகை மற்றும் கைத்தொலைபேசி கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொட்டாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களில் சார்ஜன்ட் ஒருவரும் மூன்று கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மூன்று கான்ஸ்டபிள்களில் ஒருவர் மாலபே பொலிஸ் நிலையத்துக்குப் புதிதாக வருகை தந்தவராவார். 

கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஓட்டோ, கொள்ளையிடப்பட்ட தங்க நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி கொட்டாவ வித்தியால சந்தியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த மேற்படி இளைஞரை, வழி கேட்கும் போர்வையில் அழைத்து தங்கச் சங்கிலி உள்ளிட்ட பொருட்களைச் சந்தேகநபர்கள் கொள்ளையிட்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் கடந்த 21ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கொள்ளைக்குப்  பயன்படுத்தப்பட்ட ஓட்டோ மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவருக்குச் சொந்தமானது என்று விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post