யாழிலிருந்து கதிர்காமத்திற்கு இளைஞர்கள் துவிச்சக்கரவண்டி பயணம் - Yarl Voice யாழிலிருந்து கதிர்காமத்திற்கு இளைஞர்கள் துவிச்சக்கரவண்டி பயணம் - Yarl Voice

யாழிலிருந்து கதிர்காமத்திற்கு இளைஞர்கள் துவிச்சக்கரவண்டி பயணம்யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர்.

குறித்த துவிச்சக்கரவண்டி பயணமானது காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவிலடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post