தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் சாதனை படைத்த யாழ் வீரர் புசாந்தன் அவர்களின் இல்லத்துக்கு சென்ற, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரில் வாழ்த்தினார்.
அண்மையில் இடம்பெற்ற தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் புதிய சாதனைகளை படைத்துள்ளார் யாழ் மண்ணின் வீரர் சற்குணராசா புசாந்தன்..!
தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியின் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகள் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை சுவீகரித்துள்ளார் புசாந்தன்.
120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர்,
squat பிரிவில் 330 கிலோ கிராமையும் ,
benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும்,
deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.
இதில் squat மற்றும் deadlift பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அத்துடன் இந்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராம் பளு தூக்கி புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
Post a Comment