நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பைரதத் திருவிழா இன்று(24) மாலை நடைபெற்றது.
நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்று(24)
மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பைரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
நல்லூர் மகோற்சவ திருவிழாவின்
தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் (25) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை புதன்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment