2.9 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க IMF இணக்கம் - Yarl Voice 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க IMF இணக்கம் - Yarl Voice

2.9 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க IMF இணக்கம்சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 48 மாதங்களுக்காக இந்த உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்களையடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது எனச் சர்வதேச நாணய நிதியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல் மற்றும் ஊழல் அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவுபடுத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிக்கொணர்தல் ஆகியன இந்த நிதித் திட்டத்தின் நோக்கங்களாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post