🔴கொழும்பு தாமரைக் கோபுரத்தில் 80% உள்ளூர் முதலீட்டாளர்களும், 20% வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கொழும்பு தாமரை கோபுரத்தில் இணைந்துள்ளனர்.
15க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
தாமரைக் கோபுரம் சமீபத்திய 5G இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும்,
🔴தாமரைக் கோபுரத்தை கட்டுவதற்கான மொத்த செலவு 113 மில்லியன் டொலர் 2024 க்குள் மீட்கப்படும்.
15 ஆம் திகதி முதல் திறக்கப்படும் தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம்-
ஆறு சொகுசு அறைகள் (6 வது தளம்)
ஒரு கண்காணிப்பு தளம் (7 வது தளம்) பிரபலமான உணவகங்கள், பப் (Pub) மற்றும் சுழலும் உணவகம் (5 ஆவது தளம்) , விருந்து மண்டபம் (4 வது தளம்) மேலும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவப்படுகிறது.
மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Post a Comment