நாளை அல்லது நாளை மறுதினம் நாடு திரும்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய அவர் மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் வழியாக தாய்லாந்து சென்று அங்கு சில வாரங்களை கழித்தார்.
கோத்தபாய ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் முதல் வாரம் வரை தாய்லாந்தில் தங்கியிருப்பார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கு முன்னதாகவே முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தங்குவதற்கான அதிக செலவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் இலங்கைப் பயணம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தினால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment