காரைநகர் வடக்கில் இலவச சித்த ஆயுள்வேத வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விரதம் ஆரம்ப தினமான திங்கட்கிழமை (செப்.26) காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் வைத்தியசாலையைத் திறந்துவைத்தனர்.
புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத வைத்தியசாலையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மருத்துவப் பணியாற்றிய வைத்தியர் திருமதி கஜேந்தினி ரஜீவ் மேற்படி புதிய வைத்தியசாலையில் பணியைப் பொறுப்பேற்றுள்ளார்.
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு சமீபமாக உள்ள கட்டிடம் ஒன்றில், காரைநகர் பிரதேச சபையின் வடக்கு உப அலுவலகத்துடன் இணைந்ததாக இவ்வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் மக்களுக்கு மட்டுமன்றி பொன்னாலை, மூளாய் பிரதேச மக்களுக்கும் இவ்வைத்தியசாலை வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது.
காரைநகருக்கு வெளியே இருந்து செல்பவர்கள் 782 வழி இலக்க பேருந்தில் பயணித்து மணற்காடு முத்துமாரி அம்மன் சிலையடியில் இறங்கி குறித்த வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆங்கில மருத்துவத்தின் பக்கவிளைவுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பலரும் தற்போது சித்த மருத்துவத்தை நாடிநிற்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment