தியாக தீபம் நினைவாக மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாவிரதம்..!! - Yarl Voice தியாக தீபம் நினைவாக மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாவிரதம்..!! - Yarl Voice

தியாக தீபம் நினைவாக மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாவிரதம்..!!தியாக தீபம் திலீபனை அஞ்சலி செய்யும் வகையில் நல்லூரில் உள்ள அவருடைய நினைவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதம் பல்கலைக்கழக மாணவர்களால் நீராகாரம் வழங்கி முடித்து வைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் முன்னெடுப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து அடையாள உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.


தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனியொன்று இடம்பெற்று நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை வந்தடைந்தது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக அமர்ந்திருந்ததுடன் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post