பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டி - Yarl Voice பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டி - Yarl Voice

பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டிதமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘மாணாக்க உழவர்’ என்ற பெயரில் மாணவர்களுக்கான வீட்டுத்தோட்டப் போட்டியொன்றை நடாத்தவுள்ள நிலையில் அது தொடர்பான செயன்முறை வழிகாட்டற் கருத்தமர்வும் விதைப்பொதிகள் விநியோகமும் இன்றையதினம் இடம்பெற்றது.

நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(03) காலை 9.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப்பாளர் 
பொ.அற்புதச்சந்திரன், விவசாய விஞ்ஞானி கலாநிதி எஸ். ஜே அரசகேசரி ஆகியோர் உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு விதைப்பொதிகள் விநியோகிக்கப்பட்டதுடன் செயன்முறை வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை மற்றும் உணவுக்கான நெருக்கடி ஆகியனவற்றைக் கருத்திற்கொண்டு வீட்டுத்தோட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இப்போட்டி முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 
இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் ‘மாணாக்க உழவர்’ சான்றிதழ்களும், சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post