சீனாவிற்கு கடல் வளத்தைக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம்..! வடக்கு மீனவர்கள் போர்க்கொடி - Yarl Voice சீனாவிற்கு கடல் வளத்தைக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம்..! வடக்கு மீனவர்கள் போர்க்கொடி - Yarl Voice

சீனாவிற்கு கடல் வளத்தைக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம்..! வடக்கு மீனவர்கள் போர்க்கொடி



கடலட்டை குஞ்சுகளை கடலில் விட்டு அட்டைப் பண்ணையை வளைத்து அதிக லாபம் பெற முடியாது என்பது மீனவ சமூகம் நிதர்சனமாகக் கண்ட உண்மை என தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா சீன நாட்டுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் வடக்கு கடற்றொழில் சமூகமாக போராடுவோம் என்றார்.

வடக்கு மாகாணத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே
அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் முதலீடு என்ற போர்வையில் கடலட்டை பண்ணை, நீர் வேளாண்மை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக மன்னார் பூநகரி யாழ் மாவட்ட பிரதேசங்களில் இந்த திட்டங்கள் முதலீடு என்ற போர்வையில் மிகப்பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதன் பலாபலனை இன்று நாங்கள் அனுபவிக்க தொடங்கி இருக்கின்றோம். இதுவரைக்கும் 
வடமாகனத்தில் 750க்கு மேற்பட்ட கடலட்டை பண்ணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பண்ணையின் மூலம் கடற்றொழிலாளர்கள் என்ன வருமானத்தை பெற்றனரா, அவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதா, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றதா இல்லையா என்பதை தெளிவான ஆய்வினை மேற்கொண்டு எதிர்காலத்தில் 
கடலட்டை பண்ணை வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகள், வடமாகண கடற்றொழில் நீரியியல் வளத் திணைக்களம், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச செயலகங்கள், கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி என்பவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனை. அந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் இதன்போது நீங்கள் பார்க்க வேண்டும்.

வெளிநாட்டவர்களிற்கு அடிமையாகி தொழில் செய்கின்ற சூழல் யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கின்றது. 

வடக்கு கடலை விற்று, முதலீட்டைப் பெற்று இலங்கையில் இருக்கின்ற கடனை அடைக்க டொலரை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
நாங்கள் உங்களிடம் தயவாக கேட்பது எங்கள் கடலில் நாங்கள் உழைத்து மக்களுக்கு சுத்தமான பி
புரதமான மீனை கொடுப்பதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

எங்கள் கடலை வைத்து ஏற்றுமதி மூலம் டொலரை பெற வேண்டுமாக இருந்தால் கடற்றொழிலாளர் குடும்பங்களும் சாவினை நோக்கியே நகரும்.
கடலட்டை குஞ்சு பிடித்தல் என்பது கடற்சூழலுக்கு பாதிப்பான விடயம். கடலட்டைக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் இடையே ஒரு சங்கிலித் தொடர் இருப்பதனாலேயே மீன் இனங்கள் அந்தப் பிரதேசத்தில் வருவதும் வாழ்வதும் உறுதியாக இருக்கின்றது.

அண்டை நாடான இந்தியாவில் 
கடல் அட்டை பிடிப்பதற்கும் கடல் அட்டை வளர்ப்பதற்கும் தடை.  இலங்கையில் மாத்திரம் கடலட்டை குஞ்சுகளை பிடித்து பண்ணையில் விட்டு அதிக லாபத்தை பார்க்கின்றார்கள். அந்த குஞ்சுகளை கடலில் விட்டு அட்டைப் பண்ணையை வளைத்து அதிக லாபம் பெற முடியாது என்பது மீனவ சமூகம் நிதர்சனமாகக் கண்ட உண்மை.

 அந்தப் பண்ணையில் வளர்க்கப்படுகின்ற கடலட்டைக்கு சந்தை கேள்வி இல்லை என்பதை தெளிவாக கூற விரும்புகின்றோம். இந்த கடலட்டைப் பண்ணைகளை மட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டுகளுக்கும் எங்கள் காணிகளை கொடுத்து எங்கள் சமூகத்தை அடிமையாக்க வேண்டாம் என்ற செய்தியையும் துறை சார்ந்த அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கோ வடமாகாண மக்களுக்கோ கடலுவு மீன்கள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கடலட்டை பண்ணையாளர் சங்கம் என்பதை உருவாக்கி கடலையும் கடல் பிரதேசத்தையும் அவர்கள் கையில் எடுக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் கிராமிய கடற்றொழில் அமைப்பு இருக்கின்றது. கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன.

அவர்களோடு இணைந்து செயல்படாமல் தனியான முறையிலே கடலட்டை சங்கத்தை உருவாக்கி மீனவ சமூகத்திற்குள் பிரச்சினைகளையும் விரிசல்களையும் உண்டு பண்ணுவதற்குரிய செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கடலட்டை பண்ணை அமைக்க சங்கங்கள் அனுமதி வழங்கும்போது நன்கு பரிசீலித்து அனுமதி வழங்குங்கள். கடலட்டை பண்ணைகளின் புதுவிதமான தொழில்நுட்பம் அதனுடைய சாதக பாதக பிரச்சனைகளை மக்களுக்கு புரியாமல் 10 லட்சம் 15 லட்சம் என கூறி விற்கலாம் என்ற மாயைக்குள் உள்ளீர்க்கப்படுகின்றனர்.

சீன நாட்டுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் வடக்கு கடற்றொழில் சமூகமாக போராடுவோம். யாழ்ப்பாணத்திலே அரியாலை பிரதேசத்தில் கடலட்டை குஞ்சு உற்பத்தி செய்யும் சீன நிறுவனம் இருக்கின்றது. 

அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. சீன நாடாக இருந்தாலும் சரி எந்த நாடாக இருந்தாலும் சரி எங்களுடைய கடற்பிரதேசங்களை எங்களுடைய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை செய்ய வேண்டுமே ஒழிய வெளிநாடுகளுக்கு வழங்குவதை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம்.

கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணம் வரும்போது நாங்கள் நேரடியாக சென்று எங்களுடைய கருத்தை கூறுவோம் - என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post