வடக்கு- தெற்கு உறவு பாலத்தை மேம்படுத்த யாழில் இருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம்! - Yarl Voice வடக்கு- தெற்கு உறவு பாலத்தை மேம்படுத்த யாழில் இருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம்! - Yarl Voice

வடக்கு- தெற்கு உறவு பாலத்தை மேம்படுத்த யாழில் இருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம்!வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக  யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்துசெல்லப்பட வுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாண மாநகர சபை, மானிப்பாய்பிரதேச சபை ,உடுவில் பிரதேச சபை யின்100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மூன்று நாள் விஐயமாக தென்பகுதிக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன


எதிர்வரும் நவம்பர் மாத முற்பகுதியில் , யாழ்ப்பாண மாநகர சபை உடுவில் பிரதேச சபை மானிப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்த 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு கொழும்பில் முக்கிய இடங்களான ஜனாதிபதி செயலகம், தாமரை கோபுரம், தாமரை தடாகம் பாராளுமன்றம் மற்றும் ஏனைய கொழும்பின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதோடு

 கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி மற்றும் வடக்கு தெற்கிற்கான உறவுபாலத்தினை மேம்படுத்துவதற்காக வேலை திட்டம் கொழும்பு மாநகர முதல்வரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

ஏற்கனவே கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதை போல யாழ்ப்பாணத்தில் இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்து செல்லப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post