வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்டம்! - Yarl Voice வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்டம்! - Yarl Voice

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் துன்முல்ல சந்தி பௌத்தலோகா மாவத்த பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தை முற்றுகையிட்டு சற்றுமுன்னர் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 200000 ரூபாய் லஞ்சப் பணம் வழங்கம் செயற்பாட்டை கண்டித்தும் அதனை இடையில் நிறுத்தக் கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச நீதி கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் பெருமளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும்  கண்ணீர்சிந்தியவாறும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post