இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 91 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 15.10.2022 காரைநகர் கசூரினா கடற்கரையில் வேலணை சுகுமாரின் கைவண்ணத்தில் கலாம் அவர்களின் பிரமாண்ட மண்சிற்பம் வடிக்கப்பட்டு யாழ் இந்திய துணைத்தூதர் ராக்கீஸ் நடராஜ் அவர்களுடன் அவரது காரியாலய குழுவினர் அமரர் கலாம் அவர்களுக்கு தமது இதய அஞ்சலியை செலுத்தினர்.
வேலணை சுகுமார் பல ஆலயங்களில் மணலில் சிற்பம் வரையும் திறமையானவர் என்பது யாவரும் அறிந்தது. நல்லூர் முதல் பெருந்தலங்களில் திருவிழா காலங்களில் தனது கைவண்ணத்தினால் பல சிற்பங்களை மண்ணில் வரைந்து பலரது பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment