கோப்பாய் பிரதேச செயலக கலாசார பேரவைக்குப் புதிய நிர்வாகம் தெரிவு - Yarl Voice கோப்பாய் பிரதேச செயலக கலாசார பேரவைக்குப் புதிய நிர்வாகம் தெரிவு - Yarl Voice

கோப்பாய் பிரதேச செயலக கலாசார பேரவைக்குப் புதிய நிர்வாகம் தெரிவுவலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் கலாசார பேரவைக்கு புதிய நிர்வாக சபை தெரிவு இன்று 18.10.2022 மாலை இடம்பெற்றது

தலைவராக (பதவி வழி) பிரதேச செயலர் சுபாஜினி மதியழகனும் உபதலைவராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச. லலீசனும் செயலாளராக (பதவி வழி) கலாசார உத்தியோகத்தர் ஜெயதாஸூம் உப செயலாளராக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் செ. விசுவலிங்கமும் (புத்தூர் விஸ்வம்) பொருளாளராக ஓய்வுநிலை அதிபர் மு. விக்னேஸ்வரனும் தெரிவாகினர். 

எழுத்தாளர் வடகோவை வரதராஜன் யாழ் பல்கலைக்கழக நடனத்துறை முதுநிலை விரிவுரையாளர் சத்தியப்பிரியா வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் ஓய்வுபெற்ற பிரதிக் கல்வி பணிப்பாளர் இ. குணநாதன் நடனத்துறை ஆசிரியர் நல்லினி சிவராம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட நிர்வாக சபையும் அமைக்கப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post